சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை: அமெரிக்கா

uno_slankaஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக யோசனை முன்வைத்தாலும் அதில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யோசனை ஒன்றை கொண்டு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை சம்பந்தமான யோசனையை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உரிய நிரந்தரமான தீர்வை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் இந்த யோசனையை கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

TAGS: