காஜாங் இடைத் தேர்தலில் போட்டியின்றி வெல்லலாம் என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நினைத்தால் அது நடக்காது. பிஎன் வேட்பாளர் அங்கு களமிறக்கப்படுவார்.
துணைப் பிரதமர் முகைதின் யாசின் அதை அறிவித்ததாக த ஸ்டார் கூறியது.
“நாங்கள் வழக்கம்போல் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம்.
“எதிர்த்துப் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் கவலையில்லை”, என்றாரவர்.
காஜாங், மசீச வழக்கமாக போட்டியிடும் ஒரு தொகுதி என்று குறிப்பிட்ட முகைதின், தேர்தல் ஆணையம் அத்தொகுதி காலியாக உள்ளது என அறிவித்த பின்னர் பிஎன் தன் வேட்பாளரை முடிவு செய்யும் என்றார்.