பினாங்கு பாயான் பாரு பள்ளிவாசல் தாக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறிக்கொண்டு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் என்ஜிஓ-க்ளிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 150 பேர், 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவதாக தென்மேற்கு போலீஸ் மாவட்ட தலைவர் சுப்பிரெண்டெண்ட் லாய் பா ஹின் கூறினார்.
சில தரப்பினர் பள்ளிவாசலைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறும் வதந்திகளை அவர் மறுத்தார்.
“அவர்கள் பள்ளிவாசலில் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததும் அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலம் சென்றதும் தப்பு.
“பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. சட்டத்தைப் பின்பற்றுங்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
நேற்றிரவு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி பெறவில்லை. அது குறித்து போலீசிடம் முன்கூட்டிட்டியே தெரிவிக்கவும் இல்லை என்றாரவர்.
ஆடு ஆடுவாக்கல இருக்க, அப்பன் புடுக்கு என்றானாம்!. அப்படிதான் இருக்கு இவனுங்க கதை. இவனுங்களே செய்யிறதையும் செஞ்சிட்டு, இல்லாத கதையும் கிளப்பி இந்நாட்டில் எப்படியும் தயாரிக்கப்பட்ட இனக்கலவரத்தை மூட்டி அதன் வழி அவசரகால சட்டத்தைப் பிரகனப்படுத்தி அதில் குளிர் காய நினைக்கின்றார்கள். அதற்கு அரசாங்கமும், சட்ட காவலாளிகளும், சட்டக் களவாடிப் பையன்களும் துணை போகின்றனர். இதற்கு வழிவகுத்து இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இளிச்சிக்கிட்டு இருக்கும் தலைமையும் தறிகெட்டு ஓடப் போவது. எல்லாம் ஆச்சு. இன்னும் பிள்ளையாருக்கு சுழி போடுவதுதான் மிச்சம். கூடிய விரைவில் அதுவும் பூர்த்தியாகும். வேதமூர்த்திக்கு வேலையும் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கலாம்.
சோதா மூர்த்தி இந்த விடயத்தில் எப்படி என்டர் ஆகிறார் என்று தெரியவில்லை. அனால் ஒன்னும் கிழிக்க முடியவில்லை. மானம் இழந்த காங்கிரஸ் அதை செய்யவில்லை இதை செய்ய வில்லை என்றவர் இப்போது இந்த ஆடு னு என்னமோ சொன்னீங்கலே.. அந்த மாதிரி ஆயிட்டார்..
Theni அவர்களே உங்களின் ‘ஆடு ஆடுவாக்கல …………….’ என்பதின் பொருள் விளங்க வில்லையே. தயவுசெய்து விளக்கினால் நான் பயனடைவேன். நம் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
“உங்களை பார்த்து இந்த உலகம் சிரிகிறது, உங்கள் செயலை பார்த்து இந்த உம நிழலும் வெறுக்கிறது”!! யார் யாரை தக்குகிரால்கல். யார் யார் செயலை பற்றி போராட்டம் நடத்துவது? என்னய்யா இது? இதுதான் உளம் அழியாபோவதன் ஆரம்ப அடையாளங்களில் ஒன்றோ?!!!!!
இஸ்லாமிய சமயம் பினாங்கிலிருந்து கடத்தப்பட்டாலும் கடத்தப்படலாம்! எதற்கும் அம்னோவினர் அதற்கும் ஒரு ஆர்பாட்டதிற்குத் தயாராகுங்கள்!
பினாங்கில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் திடீரென மறைந்து போகலாம்! ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்!
யார் கண்டார்! காக்கைகள் வாழும் நகரம் அல்லவா! எதுவும் நடக்கும்!
உங்களுக்கு வேண்டியவர்கள் எப்படிப்பட்ட தவறு செய்தாலும் சும்மா கையிலே தட்டுவது போல தட்டரதோட சரி; உங்க வேலை அதோடு முடிஞ்சு போவுதுங்களே. அதனாலேதான் இதுபோல அடிக்கடி நடக்குது. கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் கயமைத்தனம் செய்வது……??!! மில்லியன் கணக்கிலே மதத்திற்கு செலவு செஞ்சு என்ன புண்ணியம்..?!
தொ.ப. “ஆடு” (goat”) – ஆட்டைப் பார்த்து சொன்ன வார்த்தை. பார்த்த பொருள் அல்லது ஒரு செயலின் நிலை அப்படியே இருக்க அதற்க்கு வேற்றொரு அர்த்தத்தை கற்பிக்க முயலும் போது, மேற்கூறிய உவமைத்தொடர் அல்லது வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் எமது நண்பர்களிடையே கையாள்வது வழக்கம். அவ்வார்த்தைகள் இங்கே தோதுவாக அமைந்ததால் உபயோகித்தேன். நேத்ரா, அம்னோ எதிரலையில் நஜிப் பதவியில் இருந்து தூக்கப் பட்டால் அதற்குப் பின் வேதாவுக்கு எங்கே பதவி இருக்கப் போகின்றது. அதைத்தான் மேலே சொன்னேன்.
நாட்டில் இன ஒற்றுமையை்ப் பேன அம்மனோ மற்ற இனங்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஒற்றுமை
நிலவும்.
மற்ற இனத்தவர்களை தாக்க இல்லாத காரணத்தை தேடிக்கொண்டிருக்கின்றான்கள். மே 13 இப்படித்தானே ஆரம்பிக்கப்பட்டது.
Theni அவர்களே உங்களுக்கு மிக்க நன்றி. உங்களையும் நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.