பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் காஜாங்கில் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பும் பக்காத்தான் பங்காளிகளையும் வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் போன்ற நண்பர்களையும் பெர்சே 2.0 அமைப்பு போன்றவற்றையும் சந்தித்து விளக்கமளிக்க முடிவு செய்துள்ளர்.
அவர்கள் கேள்வி எழுப்புவது நியாயம்தான் என்று கூறிய மக்களுக்கு விளக்கமளிக்கும் கடப்பாடு தமக்கு உண்டு என்றார்.
“நான் அங்கு போட்டியிடுவது ஏன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் குறைகூறலையும் கோரிக்கையும் ஏற்று அவர்களுக்கு விளக்கமளிப்பேன். அம்பிகாகூட விளக்கம் கேட்டிருக்கிறார். அது நியாயம்தான்”, என அன்வார் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் தெரிவித்தார்.
போட்டி இடுவது நல்லதற்கே..! ஜெயித்த பின்பு மாநில முதல்வராக வரவேண்டும். மாநில அளவில் எந்தந்த பொருட்களின் விலையை குறைக்க முடியுமோ அதை முதலில் செய்ய வேண்டும் அடுத்து இன்னொரு இந்திய பிரதிநிதியை மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். பத்து பேரேன்பதை பனிரெண்டாக உயர்த்துங்கள்..?
அரசியல் இது எல்லாம் சகஜம் பா ……
நல்ல முடிவு. ஆணவம் இன்றி பதில் சொல்வது தன் கடமை என அன்வார் கூறியிருப்பது அவரது தெளிவான சிந்தனையை காட்டுகின்றது.
வாழ்த்துக்கள் ப்ரோ! நீங்களே இப்போதைய இந்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.! அப்போ சொன்னதை மக்கள் சரியாக கவனிக்க வில்லை. இம்முறை ‘நன்கு’ உணர்ந்துள்ளனர்! சும்மா புகுந்து ‘ஜமாய்ங்க’ ப்ரோ!!
அன்வார் போன்ற முதிர்நிலை தலைவர்கள் காஜாங் பகுதிக்கு வருவது. வந்து சாத்தே விலையை மட்டும் குறைக்காமல் மக்களின் தேவைகளைக் கவனிக்க வேண்டும்.சிலாங்கூர் மாநிலத்தில் முன்பிருந்த நிலை இல்லை.கடந்த 2008-ஆம் தேர்த்லுக்குப் பின்னர் இந்தியர்களுன் நலன் அதிகம் கவனிக்கப்பட்டது. ஆனால் இப்போது மாநில அரசாங்கம் கண்டும் காணாதது போல் உள்ளது. அன்வார் அவந்தாவது கவனிப்பாரா?
வெற்றி உமக்கே நம்ம கங்க்கொங்க் ஆள் தலைதெறிக்க ஓடிடுவான் , இந்த தேர்தல் களம் UMNO விலை வாசி உயர்வுக்குBN கு மக்கள் தகுந்த பாடம் புகற்ற சரியான நேரம் மக்கள் இவர்களை நய்யபுடைக்க சரியான தருணம் கங்க்கொங்க் கங்க்கொங்க் நீ அழிவது திண்ணம்