போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது,
மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது,
பிரிட்டன், கனடா, நோர்வே போன்ற நாடுகள் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்க உள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் ஆயத்தமாகவே அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாளை அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்றவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்து2 போரிங்க; இந்த தடவையாவது ஏதும் உருப்படியா நடக்குமா..?.