ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிராக குரல் கொடுக்க ஜப்பான் முன்வைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, சர்வதேச விசாரணை தேவை என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால், இலங்கை அரசாங்கம், சீனாவின் பக்கம் போய்விடும் என ஜப்பான் அச்சம் கொண்டுள்ளது.
இதனால் அமெரிக்கா முன்வைக்க உள்ள யோசனையில் அடங்கியுள்ள கடுமையான பரிந்துரைகளை தளர்த்தும் பேச்சுவார்த்தைகளை ஜப்பான் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜப்பான் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் தூதரகத்தின் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
“………இலங்கை சீனாப் பக்கம் சாய்ந்துவிடும்2 என்பது இந்தியாவின் பழைய பல்லவி….” இப்போது ஜப்பான் இதை சொல்வதற்கு இந்தியா ஏதும் இரகசியமாக சாவி கொடுத்து இருக்குமோ…?! ஏன் என்றால் இந்தியா பகிரங்கமாக இலங்கையை ஆதரிக்கும் நிலையில் இல்லை. ஆகவே ஒருகால் இந்த பின்புற கயமைத் திருட்டு விளையாட்டு. இலங்கை என்னதான் இந்தியாவின் மூஞ்சில் காரி உமிழ்ந்தாலும் துடைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக அதன் மீதுதான் அதன் பரிவும் பாசமும். தன்னை ஏசி, அடிக்கும் சொற்பேச்சுக் கேட்காத தண்டச்சோறு தனையன் மேல் உள்ள வற்றாத தாய்ப் பாசம் போன்று..!!
ஜப்பான் பிரதமர் அண்மையில் டெல்லி சென்று திரும்பயதும் சூடாக இந்த செய்தி வந்துள்ளது. இத்தாலிக்காரியும், முன்டாசுக்காரரும், கேரளா மேனன்களும் சரியாகத் தூபம் போட்டிருக்க வாய்ப்பு உள்ளது.