மன்னார் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி இன்று வியாழக்கிழமை 18 வது தடவையாக தோண்டப்பட்ட இதுவரை 55 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்கனவே மயானமொன்று இருந்ததாக காட்ட அரசும் பாதுகாப்பு தரப்பும் முற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மனித எச்சங்கள் மீட்கப்படும் இடங்களிற்கு அருகாக குடியமர்ந்துள்ள குடும்பங்களது வீடுகளிற்கு சென்ற படை அதிகாரிகள் குழுவொன்று அங்கு ஏற்கனவே மயானமொன்று இருந்ததாக சாட்சியமளிக்க வற்புறுத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அருகாகவுள்ள தேவாயலயமொன்றை மையப்படுத்தி இடுகாடு இருந்ததாகவும் அந்த இடுகாட்டிலேயே சடலங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்க வேண்டும் என அனைவரையும் வற்புறுத்தியதாக தெரிய வருகிறது.
இத்தகவலை உறுதிப்படுத்திய தமிழரசுக்கட்சி இளைஞரணி தலைவரும் சிவில் சமூக பிரமுகருமான சிவகரன், எனினும் குறித்த பகுதி மக்கள் 1990ம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்றிருந்தவர்கள் எனவும் தற்போதே மீளக் குடியமர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனால் அதன் பின்னராக அங்கு நடந்தவை பற்றி அம்மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.