ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆயத்தமாகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நோக்கில் 20க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர்,
சுரேன் சுரேந்திரன், கெரி ஆனந்தசங்கரி, வீ.கிருபாகரன் உள்ளிட்ட பல செயற்பாட்டாளர்கள் இவ்வாறு ஜெனீவா பயணம் செய்கின்றனர்.
பிரான்ஸ், கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் இவ்வாறு ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர்.
மார்ச் மாதம் 3ம் திகதிக்கு முன்னதாக ஜெனீவா சென்று, மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் ஆதரவினை அமெரிக்காவிற்காக திரட்டுவதே அரச சார்பற்ற நிறுவனங்களின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கையிலிருந்து செல்லும் ஐந்து அரச சார்பற்ற நிறுவனச் செயற்பாட்டாளர்களின் பயணத்திற்கான செலவுகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
இல்லாததையும் பொல்லாதய்ஜையும் ஜோடித்து சொல்லி2 இலங்கை தன மீது கொண்டுவரப்போகும் குற்றசாட்டுகளை மழுங்கல் படுத்த முயற்சிக்கிறது.