பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள 20 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி ஒன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளது.
இந்தக் காணொளி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் காண்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காணொளியின் படத் தொகுப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்படி காணொளியுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான அறிக்கையும் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கப்படும் என அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகள் மத்திய இலங்கை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.