எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், காஜாங் இடைத் தேர்தலில் லீ சொங் வே போட்டியிட்டால் தமக்குத் தோல்வி உறுதி என்று குறிப்பிட்டார். பெட்மிண்டன் ஆட்டத்தில் உலகின் முதல்தர ஆட்டக்காரரான அவருக்குள்ள செல்வாக்கு என்ன, புகழ் என்ன, அவரை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியுமா என்றவர் வேடிக்கையாககக் குறிப்பிட்டார்.
“லீ களமிறங்கினால் நான் தோல்வியை ஒப்புக்கொள்வேன். அதாவது பெட்மிண்டன் ஆட்டத்தில்”, என்று அன்வார் கூறினார்.
தோல்வியை, வெற்றியாய் ஆக்கிக் கொள்வதில் அன்வாருக்கு நிகர் அன்வாரே!