காஜாங் வேட்பாளரை பிஎன் இன்னும் முடிவு செய்யவில்லை

muhகாஜாங்  இடைத்  தேர்தலில்  போட்டியிடப்போவது  மசீசா-வா,  அம்னோ-வா?  இக்  கேள்வியை  பிஎன்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினிடம்  கேட்டதற்கு  அவர்  அதற்குப்  பதிலளிப்பதைத்  தவிர்த்தார்.

“அது  மசீசா-வுக்குரிய  தொகுதிதான். பல்வேறு  கருத்துக்கள்  தெரிவிக்கப்பட்டிருந்தாலும்   மசீச  தலைவருடனும்  மற்ற  , பிஎன்  பங்காளிக்  கட்சிகளுடனும்  கலந்து  பேசிய  பின்னரே  முடிவு  செய்யப்படும்”,  என  முகைதின்  கூறினார்.

“என்ன  முடிவெடுக்கப்பட்டாலும்  அது  நல்ல  முடிவாகத்தான்  இருக்கும்.  பிஎன்  தலைவர்தான் (நஜிப்  அப்துல்  ரசாக்)  அதை  முடிவு  செய்வார்”,  என்றாரவர்.