ஹுத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கட்சியைவிட்டு விலகினார் என்று கூறப்படுவதை பிகேஆர் மறுத்துள்ளது.
“கேசவனின் விளக்கத்தைக் கேட்ட பின்னர், அவர் அக்கடிதத்தை அனுப்பவில்லை என்பது உறுதியாகி விட்டது. அவர் கட்சியிலிருந்து விலகவில்லை”, என தொடர்பு இயக்குனர் பாஃமி பாட்சில் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அது ஒரு போலிக் கடிதம். அதைப் பற்றி போலீசிடம் புகார் செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாரவர்.
கேசவனால் சட்டமன்றத் தலைவர் எஸ்.கே. தேவமணிக்கு எழுதப்பட்டது என்று கூறப்படும் ஒரு கடிதம்தான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணமாகும்.
ஜனவரி 2 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதம் “கட்சியின் தலைமைத்துவம்மீது நம்பிக்கை போய்விட்டதால்” கேசவன் கட்சியை விட்டு விலகுவதாகக் கூறியது.
பி.கே.ஆரை விட்டு நண்பர் கேசவன் விலகமாட்டார். நல்ல மனிதர். கொள்கை பிடிப்புள்ளவர். அப்படியே விலகினாலும் தமிழர் என்ற வகையில் அது தவறாகாது. ஏனெனில், பக்காத்தானில் எந்த ஒரு தமிழனுக்கும் மதிப்போ, மரியாதையோ கிடையாது. அதில் இருக்கும் ஒரு சிலர் பயங்கர அரசியல் அடிவருடிகள். என்ன செய்ய, மாற்றம் வேண்டும் என்பதால் கசப்பினை மென்று, விழுங்கி, ஜீரணிக்க வேண்டியுள்ளது.
பாவம், கேசவனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது சுலபம் என்பதால் அவர் எப்பொழுதும் பலிகடாவாக்கப் படுகின்றார். பொய்யும் புரட்டும் நிறைந்த ஆளும்கட்சி அரசியல் குழப்பவாதிகள் வழிக, அழிக.
singam ,pkr ராய் குறை சொல்ல உமக்கு அருகதை கிடையாது ,,முடிந்தால் சர்வ அதிகார ஆட்சி நடத்தும் அம்னோவையும் ,ம இ காவியும் குறை சொல்லிக்கோ ,உமக்கு பொருந்தும் ..கழுதை அறியுமாம் கரப்புற வாசனை