போரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இராணுவம்! புதிய வீடியோ வெளியானது

slபோர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் தடயங்களை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும் இணைந்து அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் 25 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், மனித உரிமை மீறல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 40ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, விடுதலைப் புலிகளின் இடங்கள் மற்றும் யுத்தம் இடம்பெற்ற இடங்கள் போன்றவற்றை பார்வையிட அனுமதிப்பதில்லை எனவும் சர்வதேச சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேராசிரியர் வில்லியம் ஹோப்ஸ் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

2008ம்- 2009ம் ஆண்டு வடக்கிலுள்ள அப்பாவி தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் குண்டுவீசி அழித்தது.

அதுமட்டுமின்றி, தமிழர்களை சித்திரவதைக்குள்ளாக்குதல், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல், காணாமல்போகச் செய்தல் போன்றவற்றை இலங்கை இராணுவத்தினர் செய்துள்ளனர்.

இதற்கு உடந்தையாக இலங்கை அரசாங்கமும், இராணுவத்தின் உயர் பதவியில் வகிக்குத் அதிகாரிகளுமே முழுப் பொறுப்பு.

இன்றும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு இத்தகைய குற்றச்சாட்டுக்களை மறுத்தாலும், அனைத்துலக விசாரணையை நடத்துவதன் மூலம், மிக மூத்த அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிக்கு கொண்டு செல்ல வழிவகுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அல்ஜசீரா இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் கடைசி ஒரு வருடத்தில் ( 2008 – 2009 வரையான காலப்பகுதியில்) இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் பொது நல ஆலோசனை மையம் ( PIAC )மற்றும் சர்வதேச குற்றங்கள் ஆதாரம் திட்டம் ( ICEP ) ஆகிய அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைத் தீவு என்னும் தலைப்பில் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் குறித்து ஒளிப்படங்கள் தொடர்பான தடயவியல் ஆய்வு, செய்மதிப்படங்கள், சுதந்திரமான இராணுவ ஆய்வாளர்களின் கருத்துகள், புதிய சாட்சிகளின் பதிவுகள் என்பவற்றைக் கொண்டுள்ளது.

போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும், பொது மக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை முறைப்படி அழிப்பதற்கு வெளிப்படையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசு பிரகடனப்படுத்திய போர் தவிர்ப்பு வலயத்தில், பொதுமக்கள் மீது திட்டமிட்டு, கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.

TAGS: