கோழிகளைப் பலியிட்டு பதாதைமீது இரத்த அபிஷேகம் செய்தனர்

1 protestமுஸ்லிம்  என்ஜிஓ-களைச்  சேர்ந்த  ஆத்திரம்கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்களின்  கூட்டம்  ஒன்று  நான்கு  கோழிகளைப்  பலியிட்டு  அவற்றின்  இரத்தத்தை  டிஏபி,  பிகேஆர்  தலைவர்களின்  உருவப்படங்களைக்  கொண்ட  ஒரு  பதாதைமீது  தெளித்தனர்.

முஸ்லிம்  என்ஜிஓ-களின்  மன்றம்  என்று  தன்னை  அழைத்துக்கொண்ட  அக்கூட்டம்,  ‘மலாய்த்  தலைமைத்துவத்தையும் பேரரசரையும்  இஸ்லாத்தையும்  மலாய்க்காரர்  கண்ணியத்தையும்  இழிவுபடுத்தும்  அரசியல்வாதிகள், தலைவர்கள்,  சீன  இனவாதிகள்  ஆகியோருக்கு எதிர்ப்புத்  தெரிவிக்கும்  கண்டனக்  கூட்டம்’  என்ற  வாசகத்தைக்  கொண்ட  ஒரு  பதாதையின்கீழ்  இந்த  இரத்த  அபிஷேகத்தை  நடத்தியது. 

இரத்த  அபிஷேகம்  செய்யப்பட்ட  பதாதையில்  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்,  கேலாங்  பாத்தா  எம்பி  லிம்  கிட்  சியாங்,  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  மாச்சாங்  பூபோக்  பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  காய்  லூன்  ஆகியோரின்  உருவப்படங்கள்  பொறிக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வு  புடுராயா  பேருந்து  முனையத்துக்கும்  ஜாலான்  துன்  பேராக்கில்  உள்ள அரசாங்க  அலுவலகங்களுக்கும்  அருகில்  இன்று  பிற்பகல்  நடைபெற்றது.