அஸ்மின்: காலிட் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமக்குப் பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்

azminசிலாங்கூர் மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்   தம்  அரசியல்  எதிரிகளுக்கு  எதிராக  அதிகாரத்தைத்  தவறாக  பயன்படுத்துவதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  கூறியுள்ளார்.

சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டுக்  கழக(பிகேஎன்எஸ்)த்தின்  துணை  நிறுவனமொன்று  20-க்கு  மேற்பட்ட  ஒப்பந்தப்  பணியாளர்களை  வேலையிலிருந்து  நிறுத்தியதைக்  குறிப்பிட்டு  அந்நடவடிக்கை  “கொஞ்சமும்  மனிதாபிமானமற்றது”  என்றும்  அதை  இரத்துச்  செய்ய  வேண்டும்  என்றும்  கேட்டுக்கொண்டார். 

“அவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட  பணிநீக்கக்  கடிதங்களைத்  திரும்பப்  பெற  வேண்டும்  என்று  சம்பந்தப்பட்டவர்களைக்  கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.

சிலாங்கூர்  பிகேஆர்  தலைவரான  அஸ்மினும்  காலிட்-அஸ்மின்  தரப்புகள்  வெளிப்படையாக  மோதிக்கொண்டதை   அடுத்து கடந்த  மாதம்  பிகேஎன்எஸ்  இயக்குனர்  வாரியத்திலிருந்து  தூக்கப்பட்டார்  என்பது  குறிப்பிடத்தக்கது.