இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், எனினும், அவை திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களாக கருதப்பட முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்தம் தொடர்பில் சர்வதேச நாடுகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதனை பொறுப்புணர்ச்சியுடன் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடற்படைத் தளபதியாக தாம் கடமையாற்றியதாக அட்மிரால் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
படையினர் இன ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை எனக் தாம் குறிப்பிடவில்லை எனவும், யுத்தத்தின் போது சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவை திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டுமே சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாகவும், 30 ஆண்டுகளாக இலங்கையில் யுத்தம் நீடித்து வந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதவழிபாட்டில் ஈடுபட்டு வந்த அப்பாவி சிறுவர் சிறுமியரை பாண் வெட்டுவது போன்று புலிகள் வெட்டிய போது சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றதாகவும் இந்த உள்நாட்டு யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியிலான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஓர் ஜனநாயக நாடு எனவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதுபோலதான் உனக்கும் உன்னை சார்ந்தவருக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது! ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருப்பதாக நினைப்பா? யுத்தத்தில் அட்டுழியங்கள் புரிந்த உன்னை போல் உயர் ராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் வெளிநாடுகளில் துதரக பணிகள்!