இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை என்பது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளரின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதற்கு இறுதிப் போரின்போது இடம்பெற்ற சகல விடயங்கள் தொடர்பிலும் சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஹக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதிப்போரின் போது படையினரும் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.
எனினும் இலங்கைப் படையினர் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று அண்மையில் அவுஸ்திரேலிய நிபுணர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர் .
இது தொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் கேட்ட கேள்விக்கே ஹக் தமது பதிலை வழங்கினார்.
இந்தியா என்ற துரோகி வரிந்து கொண்டு இலங்கைக்கு உதவி செய்யுமே! .