இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியாக 2009 மார்ச் மாதம் வடக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கிய கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். (அந்ததொண்டு நிறுவனத்திற்கும் இராணுவத்திற்கும் மறைமுகத் தொடர்புள்ளதாக கருதப்படுகிறது)
அந்த நேரத்தில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் செல் தாக்குதல்கள் இடம்பெற்றன. உணவுக்காக அப்பாவித் தமிழ்மக்கள் வரிசையில் நிற்கும்போது, செல் தாக்குதல் இடம்பெற்றது. அதன்போது, வரிசையில் நின்ற பொதுமக்கள் அநேகமானோர் உயிரிழந்தனர்.
குழந்தைகளின் உடலும் முதியவர்களின் உடலும் நிலத்தில் விழுந்து கிடந்ததை நான் பார்த்தேன் என்று அந்த வரிசையில் நின்ற ஒருவர் சாட்சி சொல்லியுள்ளார்.
அதே நேரம், விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் 26 வருடங்களாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஐநா சபையின் அறிக்கை குறிப்பிடுகிறது.
போர் இடம்பெற்ற காலத்தில் பணிபுரிந்த தொண்டு நிறுவன அதிகாரியொருவர், அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தான் செல் தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் தான் அதனை நேரில் கண்டதாகவும் சாட்சி கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் மருத்துவமனைகள், நலன்புரிமுகாம்களிலும் செல் தாக்குதல் நடத்தினர். 2009 ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்ட இனப்படுகொலைகளை சர்வதேச வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
டாங் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதுடைய மகன் பாலச்சந்திரன் அநியாயமாக இராணுவத்தினால் கொல்லப்பட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் அப்பகுதிகளுக்குச் செல்ல எந்த நாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டவில்லை. இந்த நேரத்தில் சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் ஒரு முக்கிய போர்க்குற்ற ஆதாரமாகும்.
இந்த நிலையில், எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள 25 வது மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக மனித உரிமைச்செயற்பாட்டாளரான பாக்கியசோதி சரவணமுத்து ஆதாரங்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமெரிக்காதான் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன் வைக்கவுள்ளது.
இதுகுறித்து பாக்கியசோதி குறிப்பிடுகையில், மனித உரிமை மாநாட்டில் பேசுவதால் ஒன்றும் செய்ய முடியாது. அமெரிக்காவின் பிரேரணை தான் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார்.
எனினும், இனப்படுகொலை செய்யப்பட்ட இடங்களில் போர்க்குற்ற ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு அழித்து விட்டது. சின்ன தடங்களைக் கூட மறைத்து விட்டது. எனினும், அண்டையில் நீர்க்குழாய்பொருத்துவதற்காக குழிதோண்டப்பட்டபோது, மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டமை முக்கிய போர்க்குற்ற ஆதாரம். இங்கு 53 மனித எலும்புக் கூடுக்ள கண்டுபிடிக்கப்பட்டன என்று அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.