மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக இலங்கையில் சட்டம் இயற்ற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக துரித கதியில் சட்டங்களை இயற்ற முடியாது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றன.
மனித உரிமை விவகாரம் தொடர்பில் உலகின் அனைத்து நாடுகளும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும்.
மனித உரிமை விவகாரத்தை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
மனித உரிமை முடக்கப்பட்டிருந்த வடக்கு மக்கள் போர் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் சுதந்திரமான வாழ்க்கை வாழ்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதனைப் போன்று நாட்டில் எந்தவொரு இடத்திலும் ஆயுதக் குழுக்கள் இயங்கவில்லை என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தனி தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு!