ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
எதிர்வரும் 25 வது மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிடுவர் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பேர்ட் ஆகியோரின் முதல்நாள் உரைகள் பேரவையின் அமர்வில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த அமர்வின்போது மார்ச் 3 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முதல் உரையை ஆற்றுவார்.
இதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்.
இதன்பின்னர் மாலை நேர அமர்வின் போதே பிரித்தானிய மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் தமது உரைகளை ஆற்றவுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் யோசனைக்கு ஆதரவாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் உரையாற்றவுள்ளார்.
இந்தநிலையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் பேர்ட், இலங்கையின் இறுதிப்போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் பங்கேற்கவுள்ள குழு தொடர்பில் இன்னும் இலங்கை அரசாங்கம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைக்கு இலங்கை உட்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. அதன் பிறகு ராஜபக்சேவை….