ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் – மகிந்தவும் களத்தில்

mahinda_rajapaksaஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான, ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் சிறிலங்காவும் மும்முரமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே, சிறிலங்கா அமைச்சர்கள் பலரும், பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ், இந்தியாவிடம், ஆதரவு கோரிய நிலையில், சீனா செல்லவுள்ளார்.

தற்போது, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மொராக்கோவுக்கு அமைச்சர், ஜோன் செனிவிரத்னவும், அல்ஜீரியாவுக்கு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மேற்காசிய நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்தமாத முற்பகுதியில், கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க, லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களை சந்தித்து, ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவு தரும்படி கேட்கவுள்ளார்.

TAGS: