எதிர்கால உறவு குறித்து இலங்கையும் ஐ.நாவும் பேச்சு

xu_kshenuka_002இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் தமக்கிடையிலான எதிர்கால உறவுகள் குறித்து கலந்துரையாடின.

இலங்கைக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் ஹோலியாங் சூ மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுக்கா செனவிரட்ன ஆகியோர் இன்று இது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டன.

இதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் மனித மேம்பாடு குறித்து தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாளை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு அவர் கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியவுள்ளார்.

TAGS: