“இந்திய மாநில அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்” என்ற சம்பந்தனின் கூற்றை முற்றாக நிராகரிக்கிறோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

gajendran_ponnambalamஇந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினை இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தெரிவித்துள்ளமையை ஏற்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்தினை ஏற்க முடியாது.

அது மட்டுமல்ல அவ்வாறான ஒரு தீர்வினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வாக கொண்டிருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய மக்களுக்கான ஒரு சாவுமணியாகவே கருதுகின்றோம் என்றும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசம் எதிர்கொண்ட பிரச்சினை இன அழிப்பு. அந்த இன அழிப்பு வெறுமனே போர் நடைபெற்ற காலங்களில் மட்டும் நடைபெறவில்லை. இன்றைக்கும் தொடர்ந்தும் இன அழிப்பு நடைபெற்று வருகிறது. என்பதை நிரந்தர மக்கள் நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியிருக்கின்றது. அந்தத் தீர்ப்பு சாதாரண சட்ட நுணுங்கள் தெரியாதவர்களால் வழங்கப்பட்டதல்ல. அந்தத் தீர்ப்பினை வழங்கியவர்கள் இன அழிப்புத் தொடர்பில் சட்டரீதியாக உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றவர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இன அழிப்பை எதிர்கொள்ளக்கூடிய தேசங்கள் அங்கு இருக்கவில்லை. அங்கிருந்த மாநிலங்களின் மக்களின் கோரிக்கைகள் முற்றிலும் வித்தியாசமானவை.

தற்போது இந்தியாவில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்புஇ மேற்கு பாகிஸ்தான்இ கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததற்கு பிற்பாடு உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பாகும். என்று தெரிவித்த கஜேந்திரகுமார் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வினையே பெறவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் தற்போது இந்திய அரசியலமைப்புக்கு நிகரான தீர்வினை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றது. உண்மையில் தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சமஷ்டி அடிப்படையிலானது அல்லது. இந்திய அரசியலமைப்பு ஒற்றையாட்சிக்கு உரிய வலுவான சட்ட நுணுங்கங்களைக் கொண்டது.

தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஒன்றாகவும் மக்கள் மத்தியில் செல்லவேண்டிய தேவையில்லாத காலங்களில் எடுக்கின்ற நிலைப்பாடுகள் இன்னொன்றாகவுமே அமைந்துவருகின்றன. மிக முக்கியமாக முக்கியமான காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானங்கள் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரானவையாகவே அமைந்து வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: