ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. நேற்று பெய்ஜிங்கில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துப் பேசிய, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனைத் தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமை விவகாரங்களை வைத்து இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், சில நாடுகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக, வெளிவிவகார அமைச்சரிடம், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திரம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு சீனா பக்க பலமாக இருக்கும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
தமது சொந்த விவகாரங்களைக் கையாளும் அறிவும், ஆற்றலும் இலங்கை மக்களுக்கு உள்ளது என்று சீனா நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவோடு சேர்ந்து சீனாகாரனும் சேர்ந்தல்லவா ஈழ மக்களை கொன்ற நாய்களாச்சே.