டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக்கை மிரட்டியதாகக் கூறப்படும் இருவரை போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது.
அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என த சன் நாளேடு அறிவித்துள்ளது.
அதன் டிவிட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்த அந்நாளேடு, போலீசார் நாளை தெரேசா கொக்கையும் விசாரணைக்கு அழைப்பார்கள் எனக் கூறியது.
நேற்று, போலீசார் கொக் யுடியுப்பில் பதிவேற்றிய சீனப் புத்தாண்டு நையாண்டி காணொளியில் நடித்த மூன்று கலைஞர்களிடம் விசாரணை நடத்தினர்.
இவருக்கு நா அடக்கம் தேவை,நம்மவர் வொதுங்கி இருப்பது நன்று.
வெறுப்புணர்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே, வெருபூட்டும் அளவிற்கு செய்து விட்டார் ! ஒரு MP சில கட்டுப்பாட்டுக்குள் , அடக்கி வாசிக்கவேண்டும் . ஆளுங்கட்சிக்காரன் துணியை தூகிக்காட்டினால் பதிலுக்கு நாமும் செய்தால் பிறகு அவனுக்குன் நமக்கும் என்ன வேறுபாடு ??