பினாங்கில் ரெப்பிட் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

1 busபினாங்கில்,  ரெப்பிட்  பேருந்து  ஓட்டுனர்கள்  இன்று  காலை  6மணிக்குப்  பெரிய  அளவில்  நடத்தத்  திட்டமிட்டிருந்த  வேலைநிறுத்தம்  நடக்கவில்லை.  வேலைநிறுத்தம்  செய்வோர்  பதவிநீக்கம்  செய்யப்படலாம்  என்ற  அச்சம்   பரவியதை  அடுத்து  அது  கைவிடப்பட்டதாக  தெரிகிறது.

மலேசியாகினி,  கொம்தார்,  பெங்காலான்  வெல்ட்  ஆகிய  இடங்களுக்குச்  சென்று  பார்த்தபோது  பேருந்துகள்  எப்போதும்போல்  ஓடிக்  கொண்டிருந்தன.

வசூலிக்கப்பட்ட   பேருந்து  கட்டணங்களைக்  கையாடியதாகக்  கூறப்படும்   15  ஓட்டுனர்கள்  பணிநீக்கம்  செய்யப்பட்டதைக்  கண்டித்து  அந்த  வேலைநிறுத்தம்  நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகத்  தெரிகிறது.