போரின் போது மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: மன்னிப்புசபை கோரிக்கை

amnesty_international_001இலங்கையில் போரின் போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு சர்வதேச மன்னிப்பு சபை, 25வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரியுள்ளது.

ஜெனீவா மாநாடு ஆரம்பமாவதை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மன்னிப்புசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போரின் போது மனித உரிமை மீறல்களுக்கு உள்ளான பல்லாயிரக்கணக்கானோர் நீதியற்ற நிலையில் உள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

இந்தநிலையில் இறுதிப் போரின்போது இலங்கைப் படையினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக சர்வதேச மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

எனினும் மனிதநேயத்துக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்பதை மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உந்துதலை வழங்க வேண்டும் என்றும் மன்னிப்பு சபை கோரியுள்ளது.

TAGS: