அனந்தி சசிதரன், ஜெனிவாவுக்கு நேற்று பயணமானார்?

Ananthi-Sasitharanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி சசிதரன் பயணமாகி இருப்பதாகவும், இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள், வடக்கில் உள்ள மக்களின் நிலைப்பாடு என்ன என்பவற்றை அறிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லோஹன் அம்மையாரை முதலமைச்சர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்  ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

ஐநாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார்.

இதன்போது,  ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தின்போது நீங்கள் அங்கு போவீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இல்லை. நான்போக மாட்டேன். நான் போக வேண்டிய அவசியமும் இல்லை. நிர்வாகம் சம்பந்தமான பிரச்சினைகள் தான் எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது.

அரசியல் சம்பந்தமான பிரச்சினைகளைப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால் பெண்கள் சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக, அனந்தி சசிதரன் ஜெனீவா போவதற்கு நாங்கள் வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

அதிரடியாக ஜெனிவா சென்றடைந்தார் அனந்தி! – மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கஇ வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று ஜெனிவா சென்றடைந்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் ஜெனிவாவில் தங்கியுள்ள நிலையில், அனந்தி சசிதரனும் ஜெனிவா கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார்.

குறிப்பாக படையினரிடம் தமது கணவனை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி இருக்கிறார். ஜெனிவாவில் இடம்பெறும் முக்கிய மனிதஉரிமை தொடர்பான கலந்துரையாடல்கள் சந்திப்புக்களிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இதேவேளை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள்இ முதலமைச்சரின் அனுமதிஇ மாகாணசபைத் தீர்மானம் என்பன யாவும் உறுதியாகி இருந்த போதும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளால் தனது பயணம் குறித்து முன்னதாகவே கருத்து கூறுவதை தவிர்த்து வந்ததாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

TAGS: