மகாதிர்: அன்வார் பயந்து போயிருக்கிறார், அதனால்தான் வழக்கை இழுத்தடிக்கிறார்

dr mஅன்வார்  இப்ராகிமுக்கு “தவறு  செய்துவிட்டோம்  என்பது  நல்லாவே  தெரியும்” அதனால்தான்  குதப்புணர்ச்சி II மேல்முறையீடு  மீதான  விசாரணையை  வேண்டுமென்றே  தாமதப்படுத்தப்  பார்க்கிறார்  என  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  குற்றம்  சாட்டியுள்ளார்.

முகம்மட்  ஷாபி  அப்துல்லா  அரசுதரப்பு  வழக்குரைஞர்களுக்குத்  தலைமையேற்பதைத்  தடுக்க  மனு  செய்துகொள்ளப்பட்டது  பற்றியும்  முன்னாள்  போலீஸ்  அதிகாரி  ஜூட்  பெரேராவை  சாட்சியாக  அழைக்க  மேற்கொள்ளப்பட்ட  முயற்சி  பற்றியும்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார். 

“அன்வார்  மேல்முறையீடு  பற்றி  பயந்து   போயிருக்கிறார்.  தவறு  செய்துவிட்டோம்  என்பதை  அவர்  அறிவார். 

“அத்துடன்,  மூத்த  வழக்குரைஞரும்  பல  சிக்கலான  வழக்குகளில்  எல்லாம்  வெற்றி  பெற்றிருப்பவருமான  ஷாபி-யை  நினைத்தும்  அவர்  நடுங்கிப்   போயுள்ளார்”, என  மகாதிர்  கூறியதாக  மலாய்  நாளேடான  சினார்  ஹரியான்  அறிவித்துள்ளது.