பாஸ் இளைஞர்கள்: தாயிப்மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும்

pasஅப்துல்  தாயிப்  மஹ்முட்  சரவாக்  ஆளுநராக  நியமிக்கப்படுமுன்னர்  அவர்மீதுள்ள  ஊழல்,  அதிகாரமீறல்  குற்றச்சாட்டுகளிலிருந்து  விடுபட  வேண்டும்  என  பாஸ்  இளைஞர்  பகுதி  பேரரசரிடம்  மகஜர்  கொடுத்திருக்கிறது.

அந்த  மகஜரை  அரண்மனையின்  தலைமை  நிர்வாக  உதவியாளர்  சைனல்  டின்  முகம்மட்  நோர்  பெற்றுக்கொண்டதாக  பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்சான்  கயாட்  கூறினார். 

மகஜரில்  குறிப்பிடப்பட்டுள்ள  குற்றச்சாட்டுகளிலிருந்து  விடுபட்ட  பின்னரே  தாயிப்பை  சரவாக்  மாநில  அளுநராக  நியமிப்பது  பற்றி  ஆலோசிக்க  வேண்டும்  என்று   சரவாக்  பாஸ்  இளைஞர்  தலைவர்  ஆபாங் அஹ்மட்  கெர்டி ஆபாங்  மசாகுஸ்  அதில்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.  .