மேற்கத்தைய நாடுகளில் இலங்கை மீது போலியான சாயத்தை பூச பல குழுக்கள் முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக்குழுக்கள் தமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திப்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றன. எனினும் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நியூயோக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சவேந்திர சில்வா இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளை அழித்து நான்கு வருடங்கள் கழிந்துள்ளன. இந்தநிலையில் நாட்டில் அபிவிருத்தி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பயங்கரவாதத்தை ஒழித்தமை என்ற விடயத்தில் ஆசிய நாடுகளுக்கு இலங்கை உதாரணமாக திகழ்வது பெருமையான விடயமாக உள்ளது என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.