இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முனைப்பை ரஷ்யா நிராகரிப்பு

anatoly_viktorov_001மேற்கத்தைய நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை கோருவதை ரஷ்யா நிராகரித்துள்ளது.

இலங்கையின் இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை கோரப்போவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தெரிவித்து வருகின்ற.

ஏற்கனவே இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளும் இலங்கையை கேட்டுக்கொண்டது.

இந்தநிலையில் சர்வதேச விசாரணை காரணமாக நல்ல விடயங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை என்று இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு பணிப்பாளர் அனட்டொலி விக்டோரோவ் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் யார் பொறுப்பு என்பதை கண்டுபிடிப்பதில் பாரிய சிரமங்கள் இருக்கும். எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் தலையீடு உள்ளகப் பிரச்சினையில் தலையிடுவதாகவே அமையும் என்று அனட்டொலி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இலங்கைக்கு எதிரான ஜெனிவா யோசனையை சீனாவும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: