சிபூத்தே எம்பி தெரேசா கொக்கின் சீனப்புத்தாண்டுக் காணொளிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் என்ஜிஓ-களில் ஒன்று அதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களில் ஒன்று பிரதமரின் துணைவியாரைப் பிரதிபலிக்கிறது என்பதால்தான் தாங்கள் ஆத்திரம் அடைவதாகக் கூறியது.
“அதில் வரும் பெண்ணின் தோற்றம், அவரின் கைப்பை, மோதிரங்கள் அப்படியே ரோஸ்மா மன்சூரை நினைவுபடுத்துகின்றன.
“இது ஒரு அவமதிப்பு. (காணொளி) நம் தலைவர்களை இழிவுபடுத்தி, கேலி செய்வதால் மாண்புமிகு சிபூத்தே தெரேசாவை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்”, என Martabat Jalinan Muhibbah Malaysia (MJMM) தலைவர் அப்துல் ராணி குலுப் கூறினார்.
பிரதமரோட துணைவியாரே ஒன்றும் பேசல. இதுல நீங்க ஏன் அவங்களுக்காக வக்காலத்து வாங்கணும் என்பதுதான் என்னோட டவுட்?
தெரெசா கோக்கை பலி வாங்குவதாக என்னி,மலாய் சமுகத்துக்கு பெரும் அழியா அவமானத்தை உலக அரங்கில் அரங்கேற்றியாகிவிட்டது.பிகேஆர் அதன் ராஜ தந்திரம் செயல்படவும் உம்நோ காரர்கள் மதிகெட்டுவிட்டதையும் நன்கு புலப்படுத்துகிறது.பொருத்திருந்து பார்போம் எல்லாம் அவன் செயல் நாராயண நாராயண.
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா.ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் இழிவுபடுட்டலாம்.இது ஒரு பெரிய மேட்டரா? காஜாங்கய் கவனியுங்கள் நண்பர்களே.இன்ட நாடகம் எல்லாம் உங்களை இன்ட பக்கம் ஈர்க்கதான்.