அன்வாருக்கு வாக்களிப்பது அமெரிக்காவுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பாகும்

dr mடாக்டர்  மகாதிர்  முகம்மட்,  “அமெரிக்க-ஆதரவு  அரசு”  வேண்டும்  என்போர்  அன்வார்  இப்ராகிமுக்கு  வாக்களிக்கலாம்  என்று  குறிப்பிட்டார்..

“அமெரிக்க-ஆதரவு  அரசு  வேண்டுமா, (காஜாங்  இடைத் தேர்தலில்)  அன்வாருக்கு  வாக்களியுங்கள்”,  என அரசதந்திர, வெளியுறவு  விவகாரங்களுக்கான  கழகத்தில் ஒரு  நிகழ்வில்  பேசியபோது  முன்னாள்  பிரதமர்  கூறினார். 

ஆட்சியில்  மாற்றம்காண  விரும்பும்  நாடுகளில்  அமெரிக்க-ஆதரவு  அரசாங்கத்தை  நிறுவவே  மேலை  நாடுகள்  விரும்புவதாக  மகாதிர்  சொன்னார்.  

“சீரியாவோ,  மலேசியாவோ  எல்லாம்  ஒரே  மாதிரிதான்.   ஆட்சிமாற்றம்  என்கிறபோது  அமெரிக்க-ஆதரவு  அரசு  அமைவதையே  அவர்கள்  விரும்புகிறார்கள்”,  என்றாரவர்.