நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி), பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசாவுக்கு ரிம350,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சில மாதங்களுக்குமுன், மூசாவு ஹுஸாமுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டதற்காக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அந்தத் தொகையை இழப்பீடாகக் கொடுக்க வேண்டுமென நீதிபதி சு கியோக் இயாம் பணித்தார்.
“அத்துடன் வழக்குச் செலவுக்காக என்எஸ்டி ரிம10,000 வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது”, என்றாரவர்.