இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும் தமிழர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்கவேண்டும் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தென் சூடான்ää கிழக்கு திமோர் மற்றும் கொசோவோவில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தமுடியுமானால் ஏன் இலங்கை தமிழர் மத்தியில் அதனை நடத்தமுடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளமையை இணையத்தள கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெரிக்காவின் செனட் சபை மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை நிறைவேற்றவுள்ளது.
ஏற்கனவே அந்த சபை இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பிரேரணையை நிறைவேற்றியிருந்தது.
இந்தநிலையில் ஐக்கிய அமெரிக்காவும் தமது பாதுகாப்பு உட்பட்ட நலன் சார்ந்த அடிப்படையிலேயே இலங்கை தமிழர் விடயத்தில் செயற்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் அமரிக்க செனட் சபை யோசனையில் செனட்டர்களான ரிச்சட் பேர் மற்றும் போப் கேசி ஆகியோர் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சுட்டிக்காட்டவில்லை என்பதை கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடிப்படையாகக்கொண்டே அமரிக்காவின் நடவடிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம் சிவகரனின் கேள்வியை கட்டுரையாளர் கோடிட்டுள்ளார்.