இலங்கையில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த புதைகுழிகளை தோண்டுவதில் உரிய நடைமுறைகள் கைக்கொள்ளப்படவில்லை என ஆசிய சட்ட வளங்கள் நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் அவை தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து அரசாங்கம் இன்னும் முன்னேற்றம் காணவில்லை என்றும் அவற்றை உதாசீனப்படுத்தி வருவதாகவும் ஆசிய சட்ட வளங்கள் நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்த நிலையம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த புதைகுழிகளை தோண்டுவதில் உரிய நடைமுறைகள் கைக்கொள்ளப்படவில்லை. அத்துடன் தோண்டப்படும் மனித புதைகுழிகளில் இருந்து வெளிப்படும் எலும்புக்கூடுகளுக்கு உரியவர்கள் யார் என்ற விடயம் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.
மாத்தளையில் மாத்திரம் 150 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது கொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட குழி என்று நீதிமன்ற சட்டவைத்திய விசாரணைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அது ஜே வி பி கிளர்ச்சிக்காலத்தில் புதைக்கப்பட்டவை என்று எடுத்துக்கொள்ளமுடியும்.
எனினும் அது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த புதைகுழி தோண்டப்பட்டு மனித உடல்கள் புதைக்கப்பட்டமை குறித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ள பல அதிகாரிகள் இன்று இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுகள் சட்டத்தரணிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல திருக்கேதீஸ்வர புதைகுழி விடயமும் இன்னும் ஆரம்ப விசாரணைகளிலேயே உள்ளது.
அத்துடன் இந்த புதைக்குழி தோண்டப்படுவதற்கு புல்டோசர் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்படுவது சரியான முறையல்ல.
இதன் காரணமாக மனித எச்சங்களின் உண்மையான தன்மைகளை அடையாளங்கள் மறைக்கப்படவாய்ப்புள்ளன.
எனவே புதைகுழிகளை தோண்டுவதற்கான உரிய சர்வதேச நடைமுறைகள் கைக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை பலவந்ததாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பு இந்த விடயத்தில் தலையிட்டு விசாரணைகளை நடத்தவேண்டும்.
இல்லையேல் உண்மைகள் மறைக்கப்படும் என்று ஆசிய சட்டவளங்கள் நிலையம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா தனது துரோக புத்தியை காட்டும்.