பிப்ரவரி முதல் நாள் லார்கினில், டி-டீமுக்கும் ஜோகூர் டாருல் டா’ஸிம் (ஜெடிடி) குழுவுக்குமிடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சச்சரவு தொடர்பில் போலீசார் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இதை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் உறுதிப்படுத்தியதாக மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. ஆனால், விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவர் அது பற்றி மேலும் விவரிக்கவில்லை.
அச்சச்சரவு தொடர்பில் போலீசார், திரெங்கானுவிலும் ஜோகூரிலும் 20-க்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.
விசாரணை
உண்மையா
விசாரிகப்படுமா?
இதெல்லாம் கண்துடைப்பு. இது போன்ற ஜோகூர் அரசு சம்பந்த பட்ட ஏதும் வெறும் கண்துடைப்பே.