முன்னாள் பிகேஆர் உறுப்பினரான ஜைட் இப்ராகிம், அரசாங்க நிலம் கேட்டு அனுப்பிவைத்த மின்னஞ்சல்களை அம்பலப்படுத்தியுள்ளார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி.
அவை 2010-இல், ரபிஸி சிலாங்கூர் பொருளாதார அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அனுப்பப்பட்டவை. அவற்றில் ஜைட் அவரின் “கட்சிக்காரர்” சார்பில் நிலம் கேட்டிருந்தார்.
“நீங்கள் (ஜைட்) அனைவரையும் சவாலுக்கு அழைக்கிறீர்கள். நேர்மை பற்றி, வெளிப்படைத்தன்மை பற்றிப் பேசுகிறீர்கள். அதற்குமுன் இந்த விவகாரங்களுக்கு விளக்கம் கொடுங்கள்”, என்று ரபிஸி இன்று பிகேஆர் தலைமையகத்தில் கூறினார்.
ஜைட்டைத் தொடர்புகொண்டதற்கு நாளை செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பதில் சொல்வதாகக் கூறினார்.
இந்த ஆளு ஒரு நிலை இல்லாதவன். கூறு கெட்ட்வன். இவனை ஒரு பக்கம் விடுவோம்! ஆகா வேண்டிய வேலையை பார்ப்போம்!!
எவனையுமே நம்ப முடியாது. எல்லாமே தரமில்லா மட ஜென்மங்கள் பதவியில் உட்கார்ந்து இருப்பதினால் தான் — சீனர்களுக்கு இது புரியும் இதனால்தான் அவர்கள் பணம் பண்ணுவதிலே அக்கறை காட்டி பணக்காரனாக இருக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து குறைந்தது ஒருவர் வெளி நாட்டில் படித்து அங்கேயே தங்கி விடுகின்றனர் -இங்கு ஏதாவது கலவரம் என்றால் மற்றவர் அங்கு பறந்து விடுவர். நம்மவர்களுக்கு இதெல்லாம் புரியாது
இந்த அறிவிப்பு அரசியல் நோக்கம் கொண்டது,அப்போது விட்டு இப்போ வெளியிடுவதன் நோக்கம் என்னவோ,அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
அவர் நேர்மை பற்றி தெரியாது ! ஆனால் தண்ணியில் இருப்பார் !