2014 மார்ச்க்குள் நம்பத்தக்க விசாரணை ஆரம்பிக்காவிடில் சர்வதேச விசாரணை நிச்சயம்!– பிரித்தானியா

Hugo_Swireஇலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் என்பன உரிய முறையில் இடம்பெறுவதை தாம் நம்பமுடியவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றின் போது பதிலளித்த வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் இதனை தெரிவித்தார்.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய மெச்சத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

விசாரணைகளை நடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகளை நம்பமுடியவில்லை என்றும் ஸ்வைர் தெரிவித்தார்.

இந்தநிலையில் 2014 ம் மார்ச் மாதத்துக்கு முன்னர் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பத்தக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்படாவிடின், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் யோசனையின் மீது நாடுகள் சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாகவும் ஸ்வைர் குறிப்பிட்டார்.

TAGS: