நாட்டு மக்களின் சுதந்திரத்தை காட்டிலும் மனித உரிமைகள் ஒன்றும் பெரிதில்லை!– ஜனாதிபதி

1mmmநாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்திருப்பதை தவிர, ஏனைய மனித உரிமைகள் ஒன்றும் பெரியவிடயம் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தம்மை அபிவிருத்தி குறித்து சிந்திக்கவிடாமல், சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதில் வழங்கிக் கொண்டே இருக்கும் வகையிலான சூழ்நிலையில் சிக்கவைக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக ஜனாதிதிப மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது.

தற்போது நாட்டின் அபிவிருத்தியே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோலாக இருக்கிறது.

ஆனால் இந்த அபிவிருத்தியை பொறுத்துக் கொள்ள முடியாத சில நாடுகள்,  இலங்கையை ஸ்தம்பிதமடைய செய்வதற்கு முயற்சிக்கின்றன.

அந்த நாடுகளுடன் இணைந்து இலங்கையில் உள்ள சில அரசியல் வாதிகள் அரசாங்கத்தின் அபிவிருத்தியின் பால் சிந்திக்கவிடாமல் செய்ய முயற்சிக்கின்றார்கள்.

இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்திருப்பதை தவிர, ஏனைய மனித உரிமைகள் ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புத்தளம் சாஹிர கல்லூரியின் புதிய மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த 23ம் திகதி திகதி திறந்து வைத்தார்.

TAGS: