இலங்கைக்கு எதிரான யோசனை கொண்டுவரக் காரணம் என்ன?- அமெரிக்க இராஜாங்க செயலர் விளக்கம்

john_kerry_usஇலங்கை தொடர்பில் ஜெனீவாவில் யோசனை ஒன்றை முன்வைக்க அமெரிக்கா முனைப்பாக செயற்படுவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே கெரி இதனை குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம் மற்றும் நீதியான விசாரணை என்பன தொடர்பில் இன்னும் உரிய பதிலை வழங்கவில்லை.

இலங்கையில் இன்னமும் ஊடகவியலாளர்கள், சமயவாதிகள், சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

எனவேதான் எதிர்வரும் மார்ச் மாதத்தில் மற்றும் ஒரு யோசனையை இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டதாக கெரி குறிப்பிட்டுள்ளார.

பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டு வருகின்றன. எனினும் அவை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதனை சரிசெய்து கொள்ளவில்லை.

எனவேதான் இந்த யோசனையை அமெரிக்கா சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக கெரி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடந்த வருடத்தில் உரிய முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை. அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தகவல்கள் அவர்கள் பெயர் விபரங்களை வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் உட்பட்டோர், ஊடகவியலாளர்கள் உட்பட்ட அரசாங்கத்தை விமர்சிப்போரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தி வருவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: