எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில், சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொறட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கியூபா கோன்ற நாடுகள் பல தீர்மானங்களை சந்தித்தன. இலங்கை மூன்று தீர்மானங்களை சந்தித்துள்ளது. ஆனால் ஆட்டம் காணவில்லை.
ஜெனிவா பிரச்சினை பற்றி கவலையொன்றும் இல்லை என்றாலும், அது இன்னும் ஒரு தலைவலியாக இருக்கிறது.
கியூபா நாடு 60 தீர்மானங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அதனை தீவிரமாக எடுக்கவில்லையென கியூபா ஜனாதிபதி கூறியதாக மகிந்த ராஜபக்ச நினைவு கூர்ந்தார்.
30 ஆண்டுகள் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட போதிலும் ஒரு வலுவான, உறுதியான பொருளாதாரத்தை கொண்ட இலங்கை மீது சில நாடுகள் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.