சிலாங்கூர் மத்திய அரசாங்கத்துடன் நீர் ஒப்பந்தம் செய்து கொண்டதைக்கூட அறியாத அன்வார் இப்ராகிம் பெயரளவில்தான் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் என பிஎன் துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார்.
“மாநிலத்தின் பொருளாதார ஆலோசகர் என்று கூறிக்கொள்கிறார் ஆனால், சிலாங்கூரில் என்ன நடக்கிறது என்பதைக்கூட அறியாதிருக்கிறார். அப்படியானால் இவ்விசயத்தில் அவர் எந்த ஆலோசனையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது”, என சுங்கை சுவாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் முகைதின் குறிப்பிட்டார்.
அன்வாருக்குப் பதவியில்தான் நாட்டம். விவகாரங்களைத் தீர்ப்பதில் அக்கறை காட்ட மாட்டார் என்றும் அவர் சொன்னார்.
காஜாங் இடைத் தேர்தல் வேட்பாளரான அன்வார், நீர் ஒப்பந்தம் கையொப்பமிடப்படும்வரை அது பற்றி எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார்.
அன்வார் சிறந்த அரசியல்வாதி என்பதை துணை பிரதமர்
மறந்து விட்டார். தெரியாது என்று சொன்னால் நீண்ட நாள்
அரசியலில் பேர் போடலாம்.
நீ கூடத்தான் பெயர் அளவுக்கு துணை பிரதமரா இருக்க .