வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக இவ்வாறு சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாட்சியாளர்களிடம் நவனீதம்பிள்ளை சாட்சியங்களை திரட்டி வருகின்றார்.
வெள்ளைக் கொடி சம்பவம் குறித்த குற்றச்சாட்டு முற்று முழுவதும் பொய்யானது என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் யார் என்பது இன்னமும் குறிப்பிடப்படவில்லை.
வன்னி இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சென்று சரணடைந்த புலித் தலைவர்களை படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் ,உலக மனித சமுதாயம் ஆயிரம் கோட்ப்பாடுகள் வகுத்தும் , வெள்ளைக்கொடி என்ற வார்த்தைக்கு காலத்திலும் அழியா அவமானம், ஏற்படுத்திய இனவாதிகளின் இழிசெயலுக்கு மற்ற நாடுகள் துணை போனால் , நாளை மனித சமுதாயத்தின் மாண்புகள் தரம் தாழ்ந்துவிடும் ,சர்வதேசத்தின் கண்கள் சுயநலமில்லா ,பொதுநலமாய் மாறும் என்ற நம்பிக்கையில் இன்றும் நாம் .