இலங்கையில் தமிழீழம் அமைப்பது தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பினை நடத்த அமெரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்திய பிரேரணையை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.
இந்த பிரேரணையில் மேலும் இரண்டு விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சூடானில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசாங்கத்தை விரும்புகின்றனர் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் பழிவாங்கும் செயற்பாடுகளில் இருந்து தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தனியான இராச்சியம் ஒன்று கிடைப்பதே தீர்வாக அமையும் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் வசந்தம் தழைக்க , நடக்கட்டும் பொதுவாக்கெடுப்பு ,கிடைக்கட்டும் ஈழத்திற்கு விடுதலை ,பறக்கட்டும் பாரெங்கும் புலிக்கொடி ,[ மலரட்டும் தமிழ் ஈழம் ].