இலங்கையில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகிறது.
இந்த தகவலை அமெரிக்க ஜனநாயக மற்றும் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் துறை இராஜாங்க பதில் உதவி செயலாளர் உஸ்ரா செயா தெரிவித்துள்ளார்.
முகநூலில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள தவறியுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாராகவே உள்ளது என்று உஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அறிக்கை வெளியிட்டதன் அடிப்படையிலேயே உஸ்ராவும் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.