இந்தியாவை முறித்து சீனாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும்! தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

vasantha_bandara_001இந்­தி­யா­வு­ட­னான உறவை உட­ன­டி­யாக முறித்­துக்­கொண்டு, சீனா­வு­ட­னான உறவை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்­டு­மென்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நேரத்­திற்கு ஏற்ப தாளம் போடும் இந்­தி­யாவே எமது முதல் எதிரி. எனவே, சம்­பூரில் இருந்து உட­ன­டி­யாக இந்­தி­யாவை விரட்­டி­ய­டித்து, சம்பூர் அனல்மின் திட்­டத்­தினை உரு­வாக்கும் அதி­கா­ரத்­தினை சீனா­விற்கு வழங்க வேண்டும் என்று அவ் அமைப்பு மேலும் தெரி­வித்­துள்­ளது.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொது செய­லாளர் வசந்­த­ பண்­டார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­ததா­வது,

இது­வரை நாம் பரிந்­து­ரைத்த எல்­லா­வற்­றையும் அர­சாங்கம் கேட்­கா­மை­யா­லேயே இன்று எமக்கு ஜெனிவா வரை செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இனி­யா­வது நாம் கூறு­வதை அர­சாங்கம் செவி­ம­டுத்து கேட்க வேண்டும்.

நாம் சீனா­வு­டனும், ரஷ்­யா­வு­டனும் எப்­போதும் எம் உறவை பலப்­ப­டுத்த வேண்டும். ஏனெனில் சர்­வ­தே­சத்தில் அவர்­களே எமக்கு ஆத­ர­வாக உள்­ளனர். எம்­மிடம் உண்­மை­யான உறவு கொண்­டது சீனாவும், ரஷ்­யா­வுமே. மாறாக இந்­தியா அல்ல. இந்­தியா ஒரு பச்சோந்தி கடந்த காலத்தை உற்­று­நோக்­கினால் எப்­போ­துமே இந்­தியா எமக்கு நன்மை பயத்­த­தில்லை.

எமக்கு நன்­மை­தரும் எந்த செய­லையும், இந்­தியா இது­வரை செய்­ய­வில்லை. எனவே, இந்­தி­யாவை எம் நாட்டில் கால்­ப­திக்க ஒரு­போதும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

இந்­தி­யா­வி­லி­ருந்து வாக­னங்கள் இறக்­கு­மதி செய்­வதை இடை­நி­றுத்­தி­விட்டு, சீனா­விடம் இருந்து வாக­னங்­களை இறக்­கு­மதி செய்ய வேண்டும். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இந்­தி­யா­வுடன் உற­வு­கொள்­ளக்­கூ­டாது. அத்­தோடு எமது பொரு­ளா­தார செயற்­பா­டு­களை மேற்கு நாடுகள் ஏற்­ப­டுத்­திக் ­கொள்­வதைத் தவிர்த்து, சீனா­வு­டனும் ரஷ்­யா­வு­ட­னு­மான பொரு­ளா­தார உறவை மேம்­ப­டுத்த வேண்டும். இதுவே எமக்கு நன்மை பயக்கும்.

TAGS: