ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை கோரி வெளியிடப்பட்டுள்ள தபால் அட்டைகளை, மக்கள் தளத்திற்கு கொண்டு செல்ல, பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்கான போராட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுத்துள்ளது.
ஐ.நாவினை மையப்படுத்திய செயல்முனைப்பில், மக்களையும் ஈடுபடுத்தும் பொருட்டு வெளிவந்ததுள்ள இத்தபால் அட்டைகள், ஆங்கிலம் பிரென்சு டொச்சு மொழிகளில் முதற்கட்டமாக வெளிவந்துள்ளன.
இத்தபால் அட்டைகளை அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்கும், ஐ.நா மனித உரிமைச் சபையின் அங்கத்துவ நாடுகளின் தூதரங்களையும் நோக்கியும் பொதுமக்களை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தமிழர்கள் கூடுகின்ற பொது இடங்களிலும், தமிழர் வர்த்தக பகுதிகளிலும் இத்தபால் அட்டைகள் படிப்படியாக தற்போது மக்களை நோக்கிய விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இத்தபால் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் அந்தந்த நாடுகளில் உள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது [email protected] இந்த மின்னஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், அரசியற்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய தனது செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.