பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீனும், அமெரிகத் தூதுவர் மிச்செல் சிசனும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்காக ஆதரவு திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இவ்வாறு ஆதரவு திரட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன் உயர்ஸ்தானிக ரான்கீன், புதுடெல்லிக்கு விஜயம் செய்து இவ்வாறு ஆதரவு திரட்டியுள்ளார்.
இலங்கையில் தூதரகம் இல்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதரக, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் இவ்வாறு ஆதரவு திரட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசனும் இவ்வாறே இலங்கைக்கு எதிராக அமரிக்காவின் நியூயோர்க் நகரில் இராஜதந்திரிகளை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.